20 July 2026

Scientists Created a Black Hole with LIGHT? 😱 | ஒளியால் கருந்துளி உருவாக்கப்பட்டது! |

 



ஒளியைப் பயன்படுத்தி Black Hole உருவாக்க முடியுமா?

அதுவும் ஆய்வக மேசையிலேயே?

இந்த கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் "ஆம்!" என்று பதிலளித்துள்ளனர்.

சாதாரண black hole என்பது மிகப் பெரிய நட்சத்திரம் சுருங்கி உருவாகும். அதன் ஈர்ப்பு விசை அளவிட முடியாத அளவுக்கு வலிமையானது. ஒளிக்கூட அதிலிருந்து தப்பிக்க முடியாது.

ஆனால் இந்த புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் லேசர் ஒளியை ஒரு Optical Fiber வழியாக மிகத் துல்லியமாக செலுத்தி, black hole போல செயல்படும் ஒரு செயற்கை அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பில், ஸ்டீபன் ஹாக்கிங் 1974-ல் கணித்த "Hawking Radiation" போன்ற கதிர்வீச்சின் அடையாளங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஹாக்கிங் கோட்பாட்டின்படி, black hole முற்றிலும் கருப்பாக இருப்பதில்லை. அவை மிக மெதுவாக கதிர்வீச்சை வெளியிட்டு, கோடிக்கணக்கான ஆண்டுகளில் தங்கள் நிறையை இழந்து இறுதியில் மறைந்து போகும்.

உண்மையான black hole கதிர்வீச்சை நேரடியாகக் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் இந்த செயற்கை ஒளி black hole மூலம் அந்த கோட்பாட்டை ஆய்வகத்திலேயே சோதிக்க முடிந்துள்ளது.

இது குவாண்டம் இயற்பியல் மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றின் மர்மங்களை புரிந்துகொள்ள ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

 அறிவியல் மற்றும் விண்வெளி தகவல்களுக்கு, Travel With Physics சேனலை Follow செய்ய மறக்காதீர்கள்! நன்றி!

No comments:

Post a Comment

Scientists Created a Black Hole with LIGHT? 😱 | ஒளியால் கருந்துளி உருவாக்கப்பட்டது! |

  ஒளியைப் பயன்படுத்தி Black Hole உருவாக்க முடியுமா? அதுவும் ஆய்வக மேசையிலேயே? இந்த கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் "ஆம்!" என்று பதி...