20 July 2026

இந்தியா படைத்த புதிய விண்வெளி வரலாறு | Skyroot Vikram-1 வெற்றி | இந்தியாவின் பெருமை 🇮🇳

 


இந்திய விண்வெளி வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள்! ISRO அல்ல... ஒரு தனியார் இந்திய நிறுவனம் முதல் முறையாக தனது சொந்த ராக்கெட்டை வெற்றிகரமாக பூமி சுற்றுப்பாதைக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த Skyroot Aerospace நிறுவனம், முன்னாள் ISRO விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தானா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் உருவாக்கிய விக்ரம் 1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சுமார் 22 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், Low Earth Orbit சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று Solid Fuel நிலைகளும், இறுதியில் மீண்டும் இயக்கக்கூடிய Liquid Fuel சுற்றுப்பாதை நிலையும் உள்ளது. இதன் மூலம் செயற்கைக்கோள்களை மிகவும் துல்லியமாக சுற்றுப்பாதையில் நிறுவ முடிகிறது.

இந்த வெற்றியால், தனியார் நிறுவனத்தின் மூலம் சுற்றுப்பாதையை அடைந்த உலகின் சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய புரட்சிக்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் குறைந்த செலவில் அதிக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கும், இந்தியாவின் உலகளாவிய விண்வெளி சந்தை வளர்ச்சிக்கும் இந்த சாதனை மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும்.

அறிவியல் மற்றும் விண்வெளி தகவல்களுக்கு Travel With Physics சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள். நன்றி!

No comments:

Post a Comment

Scientists Created a Black Hole with LIGHT? 😱 | ஒளியால் கருந்துளி உருவாக்கப்பட்டது! |

  ஒளியைப் பயன்படுத்தி Black Hole உருவாக்க முடியுமா? அதுவும் ஆய்வக மேசையிலேயே? இந்த கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் "ஆம்!" என்று பதி...