13 July 2026

Earth's "Quasi-Moon" புகைப்படத்தை எடுத்த சீனா!


விண்வெளி ஆராய்ச்சியில் சீனா கடந்த சில ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியது, செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது, தற்போது Quasi-Moon-ஐ ஆய்வு செய்வது என பல முக்கிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

Quasi-Moon என்றால் என்ன?
Quasi-Moon என்பது பூமியின் உண்மையான நிலவைப் போல பூமியை நேரடியாகச் சுற்றி வருவதில்லை. அதற்கு பதிலாக, அது சூரியனைச் சுற்றுகிறது. ஆனால் அதன் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையுடன் மிகவும் ஒத்திருக்கிறது. அதனால், பல ஆண்டுகளாக பூமியுடன் சேர்ந்து பயணிப்பது போலத் தோன்றுகிறது.
அதனால்தான் இதற்கு "Quasi-Moon" அல்லது "போலி நிலவு" என்ற பெயர் வந்தது.Kamoʻoalewa என்பது தான் சீனா படம் எடுத்த Quasi moon. 

இது மிகவும் சிறிய விண்பொருள். இதன் விட்டம் சுமார் 40 முதல் 100 மீட்டர் வரை இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.  சிறியதாக இருந்தாலும், அதன் தோற்றமும், உருவான விதமும், பூமியின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். இப்போது சீனாவின் Tianwen-2 விண்கலம், Kamoʻoalewa-வை அணுகி அதன் மேற்பரப்பின் முதல் நெருக்கமான படங்களை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,  விண்வெளியிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாதிரிகள் திட்டமிட்டபடி பூமியை அடைந்தால், விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்து, இந்த விண்பொருள் எவ்வாறு உருவானது? இது உண்மையில் நிலவில் இருந்து பிரிந்த துண்டா? அல்லது வேறு ஒரு சிறுகோளா? என்ற கேள்விகளுக்கு விடை காண விஞ்ஞானிகள் முயற்சிப்பார்கள்.சில ஆராய்ச்சியாளர்கள், Kamoʻoalewa என்பது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய மோதலின் போது வெளியேறிய பாறைத் துண்டாக இருக்கலாம் என்ற சுவாரஸ்யமான கருத்தையும் முன்வைத்துள்ளனர். ஆனால் இதை உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது. இந்த ஆய்வு ஏன் மிகவும் முக்கியமானது?
ஏனெனில், இத்தகைய சிறிய விண்பொருட்கள் சூரியக் குடும்பம் உருவான ஆரம்பகாலத்தின் தகவல்களை தங்களுக்குள் பாதுகாத்து வைத்திருக்கலாம். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பூமி, நிலவு மற்றும் மற்ற கோள்கள் எவ்வாறு உருவாகின என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.மேலும், எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து கனிம வளங்களைப் பெறும் தொழில்நுட்பத்திற்கும், பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்பொருட்களை கண்காணிப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவக்கூடும்.

No comments:

Post a Comment

Scientists Created a Black Hole with LIGHT? 😱 | ஒளியால் கருந்துளி உருவாக்கப்பட்டது! |

  ஒளியைப் பயன்படுத்தி Black Hole உருவாக்க முடியுமா? அதுவும் ஆய்வக மேசையிலேயே? இந்த கேள்விக்கு தற்போது விஞ்ஞானிகள் "ஆம்!" என்று பதி...