15 July 2026

10 ஆண்டுகள் காத்திருந்த Quantum Material... இறுதியாக உருவானது!

 


பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோட்பாட்டில் மட்டுமே இருந்த ஒரு Quantum Material, தற்போது முதல் முறையாக ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இந்த சாதனையை பின்லாந்தின் University of Jyväskylä மற்றும் Aalto University ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு Shawulienu Kezilebieke, Peter Liljeroth, மற்றும் Jose Lado தலைமையேற்றனர். 

அவர்கள் உருவாக்கிய புதிய பொருள் ஒரு இரு பரிமாண Topological Crystalline Insulator ஆகும். இதை உருவாக்க, Tin Telluride என்ற பொருளின் இரண்டு அணு அடுக்குகளை, Niobium Diselenide என்ற அடித்தளத்தின் மீது மிகத் துல்லியமாக வளர்த்தனர். 


இது எப்படி செயல்படுகிறது?

இந்த பொருளின் உள்ளே மின்சாரம் செல்லாது. ஆனால் அதன் விளிம்புகளில் மட்டும் எலக்ட்ரான்கள் மிகக் குறைந்த இழப்புடன் சுதந்திரமாக பயணிக்கின்றன. இந்த சிறப்பான "Edge States" குவாண்டம் விதிகளாலும் படிகத்தின் அமைப்பாலும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், அடித்தளத்தால் ஏற்படும் Strain இந்த குவாண்டம் பண்பை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. 

இதன் மிகப்பெரிய பயன் என்ன தெரியுமா?

அறை வெப்பநிலையிலேயே செயல்படும் Quantum Electronics, Quantum Computers, Spintronics மற்றும் அடுத்த தலைமுறை அதிவேக மின்னணு சாதனங்களுக்கு இது புதிய பாதையைத் திறக்கக்கூடும். 

இன்றைய இந்த கண்டுபிடிப்பு, நாளைய கணினி உலகையே மாற்றக்கூடிய ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கலாம்!

14 July 2026

விண்வெளியில் மனித உறுப்பு உருவாக்கம்! மருத்துவ உலகை மாற்றப்போகும் அதிசய சாதனை!

 


விண்வெளி ஆராய்ச்சி என்பது வெறும் ராக்கெட்டுகள் அல்லது கிரகங்களைப் பற்றியது மட்டுமல்ல...

பூமியில் மனித உயிர்களை காப்பாற்ற புதிய மருத்துவப் புரட்சிகள் விண்வெளியில் இப்போது உருவாக தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் மனித உறுப்புகளை விண்வெளியிலேயே 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?

அதற்கான முதல் மிகப்பெரிய வெற்றியை விஞ்ஞானிகள் தற்போது பெற்றுள்ளனர்!

எதிர்காலத்தில் உறுப்பு தானம் கிடைக்காமல் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற இந்த தொழில்நுட்பம் உதவக்கூடும்.

அமெரிக்காவின் Auxilium Biotechnologies என்ற உயிரித்தொழில்நுட்ப நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையமான ISS-ல் முதன்முறையாக மனித கல்லீரல் (Liver) மற்றும் சிறுநீரக (Kidney) திசுக்களை 3D Bioprinting தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

ஏன் விண்வெளியில் உருவாக்க வேண்டும்?

பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால், செல்கள் கீழே இறங்கி சமமாக பரவுவதில்லை.

இதனால் உருவாகும் திசுக்களின் அமைப்பு முழுமையாக இயற்கையான மனித உறுப்புகளைப் போல இருக்காது.

ஆனால் விண்வெளியில் Microgravity, அதாவது மிகக் குறைந்த ஈர்ப்பு விசை சூழலில், செல்கள் அனைத்தும் மிகவும் சமமாக பரவி, இயற்கையான திசுக்களைப் போன்ற அமைப்பை உருவாக்க முடிகிறது.

இதுவே இந்த சாதனையின் மிகப்பெரிய ரகசியம்.

இந்த ஒரே விண்வெளி பயணத்தில் விஞ்ஞானிகள்:

கல்லீரல் திசு,

சிறுநீரக திசு,

 மூட்டு குருத்தெலும்பு திசு

மேலும்,

28 நரம்பு பழுது சரிசெய்யும் Implant-களையும் வெற்றிகரமாக தயாரித்துள்ளனர்.

ஒரே விண்வெளி பயணத்தில் பல்வேறு உயிரியல் திசுக்களை உருவாக்கிய முதல் முயற்சியாக இது பதிவாகியுள்ளது.

விண்வெளியில் தயாரிக்கப்பட்ட இந்த திசுக்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்போது அவை ஆய்வகங்களில் விரிவாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

13 July 2026

Earth's "Quasi-Moon" புகைப்படத்தை எடுத்த சீனா!


விண்வெளி ஆராய்ச்சியில் சீனா கடந்த சில ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியது, செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது, தற்போது Quasi-Moon-ஐ ஆய்வு செய்வது என பல முக்கிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

Quasi-Moon என்றால் என்ன?
Quasi-Moon என்பது பூமியின் உண்மையான நிலவைப் போல பூமியை நேரடியாகச் சுற்றி வருவதில்லை. அதற்கு பதிலாக, அது சூரியனைச் சுற்றுகிறது. ஆனால் அதன் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையுடன் மிகவும் ஒத்திருக்கிறது. அதனால், பல ஆண்டுகளாக பூமியுடன் சேர்ந்து பயணிப்பது போலத் தோன்றுகிறது.
அதனால்தான் இதற்கு "Quasi-Moon" அல்லது "போலி நிலவு" என்ற பெயர் வந்தது.Kamoʻoalewa என்பது தான் சீனா படம் எடுத்த Quasi moon. 

இது மிகவும் சிறிய விண்பொருள். இதன் விட்டம் சுமார் 40 முதல் 100 மீட்டர் வரை இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.  சிறியதாக இருந்தாலும், அதன் தோற்றமும், உருவான விதமும், பூமியின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். இப்போது சீனாவின் Tianwen-2 விண்கலம், Kamoʻoalewa-வை அணுகி அதன் மேற்பரப்பின் முதல் நெருக்கமான படங்களை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,  விண்வெளியிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாதிரிகள் திட்டமிட்டபடி பூமியை அடைந்தால், விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்து, இந்த விண்பொருள் எவ்வாறு உருவானது? இது உண்மையில் நிலவில் இருந்து பிரிந்த துண்டா? அல்லது வேறு ஒரு சிறுகோளா? என்ற கேள்விகளுக்கு விடை காண விஞ்ஞானிகள் முயற்சிப்பார்கள்.சில ஆராய்ச்சியாளர்கள், Kamoʻoalewa என்பது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய மோதலின் போது வெளியேறிய பாறைத் துண்டாக இருக்கலாம் என்ற சுவாரஸ்யமான கருத்தையும் முன்வைத்துள்ளனர். ஆனால் இதை உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது. இந்த ஆய்வு ஏன் மிகவும் முக்கியமானது?
ஏனெனில், இத்தகைய சிறிய விண்பொருட்கள் சூரியக் குடும்பம் உருவான ஆரம்பகாலத்தின் தகவல்களை தங்களுக்குள் பாதுகாத்து வைத்திருக்கலாம். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பூமி, நிலவு மற்றும் மற்ற கோள்கள் எவ்வாறு உருவாகின என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.மேலும், எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து கனிம வளங்களைப் பெறும் தொழில்நுட்பத்திற்கும், பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்பொருட்களை கண்காணிப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவக்கூடும்.

13 August 2025

Madurai Kamaraj University - B.Sc., Physics Syllabus

Atomic and Nuclear Physics UNIT - III Lecture notes

Unit - III: RADIOACTIVITY: Discovery of radioactivity – natural radio activity – properties of alpha rays, beta rays and gamma rays – GeigerNuttal law – alpha particle spectra –Gammow's theory of alpha decay (qualitative study) – beta ray spectra – neutrino theory of beta decay – nuclear isomerism – internal conversion – nonconservation of parity in weak interactions.


Atomic and Nuclear Physics UNIT - II Lecture notes

Unit - II: ATOMIC SPECTRA: Origin of atomic spectra – excitation and ionization potentials – Davis and Goucher's method – spectral terms and notations – fine structure of sodium D-lines – Zeeman effect – Larmor's theorem – quantum mechanical explanation of normal Zeeman effect – anomalous Zeeman effect (qualitative explanation) –Paschen-Back effect – Stark effect.


Atomic and Nuclear Physics UNIT - I Lecture notes

UNIT - I: VECTOR ATOM MODEL: Introduction to atom model – vector atom model – electron spin –spatial quantisation– quantum numbers associated with vector atom model – L-S and J-J coupling – Pauli's exclusion principle – magnetic dipole moment due to orbital motion and spin motion of the electron – Bohr magnetron – Stern-Gerlach experiment – selection rules – intensity rule.

17 October 2024

Problems in Relativity

 PROBLEM NO. 1 (UG NEET 2024)


 PROBLEM NO. 2 (UG NEET 2024)






Mechanics Problem No. 3

PROBLEM NO. 3 (UG NEET 2023)

A spring is stretched by 5 cm by a force 10 N. The time period of the oscillations when a mass of 2 kg is suspended by it is:

a) 6.28s     b) 3.14s    c) 0.628s     d) 0.0628s



                                                                     « Previous                 

Simple Harmonic Motion Problem No. 3

                                                     Problem : 3 (UG NEET 2023)





                                                                        « Previous                

10 ஆண்டுகள் காத்திருந்த Quantum Material... இறுதியாக உருவானது!

  பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோட்பாட்டில் மட்டுமே இருந்த ஒரு Quantum Material, தற்போது முதல் முறையாக ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்...